பெண்ணிடம் தகராறு செய்த 2 சிறுவர்கள்
காவேரிப்பட்டணத்தில் பெண்ணிடம் தகராறு செய்த 2 சிறுவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
காவேரிப்பட்டணம்:
தர்மபுரி மாவட்டம் வெள்ளிசந்தை பகுதியை சேர்ந்தவர் ஜெயசித்ரா (வயது 46). இவர் கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார். மேலும் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த 15-ந் தேதி இவர் ஸ்கூட்டரில் காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது 15 மற்றும் 18 வயதுடைய 2 சிறுவர்கள் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்து ஜெயசித்ராவிடம் தகராறு செய்தனர். அப்போது பொதுமக்கள் அங்கு வரவே 2 சிறுவர்களும் தப்பி சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story