கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
தினத்தந்தி 17 May 2022 11:53 PM IST (Updated: 17 May 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

சரவணம்பட்டி
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியைச் சேர்ந்தவர் சீமான். இவரது மகன் மணிகண்டன் (வயது21). திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ராகவன் என்பவரது மகன் கவியரசு (20), மயிலாடுதுறையைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரது மகன் கவுதமன் (24). இவர்கள் கோவை வெள்ளானைப்பட்டி ஆண்டக்காபாளையம் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். 

சம்பவத்தன்று மணிகண்டனின் மோட்டார் சைக்கிளில் 3 பேரும் காளப்பட்டி சந்தைக்கு சென்றுள்ளனர். மணிகண்டன் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். காளப்பட்டியை அடுத்த செந்தோட்டம் அருகே சென்று கொண்டிருந்த போது மணிகண்டன் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த கார் மீது மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மோதியது. 

இதில் மணிகண்டன் நிலைதடுமாறி லாரியின் பக்கவாட்டில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

 இதுகுறித்து தகவலறிந்த கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story