சிங்கம்புணரியில் அரசு பள்ளியில் வேரோடு சாய்ந்த மரம்


சிங்கம்புணரியில் அரசு பள்ளியில் வேரோடு சாய்ந்த மரம்
x
தினத்தந்தி 17 May 2022 11:53 PM IST (Updated: 17 May 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் அரசு பள்ளியில் மரம் ஒன்று திடீரென்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

சிங்கம்புணரி
 சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்போது பிளஸ்-2 தேர்வு நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். காலை 8.30 மணி அளவில் பள்ளி வளாகத்தில் இருந்த பெரிய மரம் ஒன்று திடீரென்று வேரோடு சாய்ந்து விழுந்தது. நல்லவேளை அந்த வழியாக மாணவர்கள் யாரும் செல்லவில்லை. இதனால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது.

Next Story