வேலை வாய்ப்பு முகாம்
தலைஞாயிறில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது
வாய்மேடு
நாகை மாவட்டம், தலைஞாயிறு பேரூராட்சி சமுதாய கூடத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் சுர்ஜித் சங்கர் தலைமை தாங்கினார். இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், கலந்து கொண்ட 1,500 இளைஞர்களில் 488 பேருக்கு வேலை கிடைத்தது. இதில், வட்டார காங்கிரஸ் தலைவர் கனகராஜ், நகர தலைவர் வீரமணி, வட்டாரத் துணை தலைவர் நடேசன், நகர செயலாளர் சரவணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வக்கீல் அருண் ஷோரி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story