மோட்டார் சைக்கிள் விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பலி
x
தினத்தந்தி 18 May 2022 12:04 AM IST (Updated: 18 May 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பலியானார்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க.கோவிந்தன்(வயது 70). அ.தி.மு.க. பிரமுகரான இவர், வீரபாண்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். நேற்று சொந்த வேலை காரணமாக திருக்கோவிலூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த தங்க.கோவிந்தன் பின்னர் அங்கிருந்து வீரபாண்டி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

 டி.தேவனூர் கிராமம் அருகே வந்தபோது எதிரே தேர்வு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரை சேர்ந்த ஆசிரியர்கள் நவராஜ்தேவசகாயம்(51) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்(46) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும், தங்க கோவிந்தன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின.

 இதில் படுகாயம் அடைந்த தங்க கோவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த ஆசிரியர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story