வனதுர்க்கை அம்மன் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
வனதுர்க்கை அம்மன் கோவிலில் பவுர்ணமி வழிபாடு நடந்தது
வேதாரண்யம்
வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவில் பவுர்ணமி வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் வேதாரண்யம் மேல வீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடத்தில் நடந்த பவுர்ணமி வழிபாட்டில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசக பாடல்களை பாடி வழிபாடு செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட பலர் கலந்து கொண்டனர். வேதாரண்யம் வேம்ப தேவன்காடு தெற்கு பகுதியில் உள்ள மவுன சித்தர் பீடத்தில் பவுர்ணமி வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story