போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது வழக்கு


போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 May 2022 12:07 AM IST (Updated: 18 May 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போடி: 

சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியை சேர்ந்தவர் கதிர் கண்ணன். இவர் சென்னையில் ஆயுதப்படை போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி அழகுலட்சுமி  போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா சித்தூரை சேர்ந்த எனக்கும், கதிர்கண்ணனுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. என்னை திருமணம் செய்து வாழ்க்கை வீணடித்து விட்டதாககூறி மாமியார் தமிழ்செல்வி, கதிர்கண்ணனின் சகோதரி மேகலாதேவி ஆகியோர் அடிக்கடி தகராறு செய்து வந்தனர். தற்போது எனது கணவர் என்னுடன் வாழ மறுத்துவிட்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் கதிர்கண்ணன் உள்பட 3 ேபர் மீது வழக்குப்பதிவு செய்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story