யானை தாக்கி விவசாயி சாவு
தளி அருகே கர்நாடக எல்லையில் யானை தாக்கி விவசாயி இறந்தார். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
விவசாயி சாவு
தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் தளி வனப்பகுதியை ஓட்டி உள்ள கர்நாடக மாநிலம் கமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 58). விவசாயி. இவர் கர்நாடக வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் நின்ற காட்டுயானை அவரை துரத்தி சென்று தாக்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் விரைந்து சென்று காட்டு யானையை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கர்நாடக வனத்துறை அதிகாரிகள், பிரபாகர், பிரசாந்த் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி வனச்சரகர் சுகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
இதனையடுத்து வனத்துறையினர் விவசாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யானை தாக்கி விவசாயி இறந்தது தொடர்பாக 2 மாநில வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story