கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட 5 ஆயிரத்து 503 வழக்குகளை திரும்ப பெற நடவடிக்கை


கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட 5 ஆயிரத்து 503 வழக்குகளை திரும்ப பெற நடவடிக்கை
x
தினத்தந்தி 18 May 2022 12:26 AM IST (Updated: 18 May 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட 5 ஆயிரத்து 503 வழக்குகளை அரசின் உத்தரவின்படி திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட 5 ஆயிரத்து 503 வழக்குகளை அரசின் உத்தரவின்படி திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் ஆகியோர் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இவ்வழக்குகளில் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்திய வழக்குகள் மற்றும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவற்றை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொதுமக்களின் நலன் கருதி கைவிடப்படுவதாக அரசின் உத்தரவின்படி காவல்துறை தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
 இதன்படி மாநிலம் முழுவதும் மேற்குறிப்பிட்ட பெரிய குற்ற வழக்குகள் தவிர கைவிட்டு வழக்கினை திரும்ப பெறக்கூடிய வழக்குகள் என 8 லட்சத்து 98 ஆயிரத்து 948 வழக்குகள் திரும்ப பெற தகுதி உடையனவாக கண்டறியப்பட்டுள்ளது.

5,503 வழக்குகள்

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 503 வழக்குகளில் 14 ஆயிரத்து 487 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் 2 ஆயிரத்து 989 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளன. 2 ஆயிரத்து 502 வழக்குகள் புலன் விசாரணையிலும் மீதி ஆரம்ப கட்ட நிலையிலும் உள்ளன. 
இந்த வழக்குகளை மேற்கண்ட விதிகளின் கீழ் கைவிட தகுதியானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் போடப்பட்ட மேற்கண்ட வழக்குகளில் அரசின் விதிகளின்கீழ் உள்ள வழக்குகளை கைவிட மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story