தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டிவனம்,
திண்டிவனம் தீயணைப்பு நிலையம் சார்பில் திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவில் வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் கதிர்வேலு தலைமையிலான வீரர்கள் கலந்து கொண்டு தீ விபத்து ஏற்பட்டால் நவீன எந்திரங்களை பயன்படுத்தி தீயை அணைப்பது குறித்து கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் முன்பு செயல்விளக்கம் அளித்தனர். அப்போது தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் முருகையன், கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், அர்ச்சகர்கள் ராதா குருக்கள், கிஷோர்குமார், எழுத்தர் சங்கர் மற்றும் கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story