தென்காசியில் அரசு பஸ் கண்டக்டர் உள்பட 2 பேரை தாக்கி நகை பறிப்பு 7 திருநங்கைகள் கைது


தென்காசியில் அரசு பஸ் கண்டக்டர் உள்பட 2 பேரை தாக்கி நகை பறிப்பு 7 திருநங்கைகள் கைது
x
தினத்தந்தி 18 May 2022 12:30 AM IST (Updated: 18 May 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் அரசு பஸ் கண்டக்டர் உள்பட 2 பேரை தாக்கி நகை பறித்த திருநங்கைகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி:
கண்டக்டர்
தென்காசியை அடுத்த செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 48). இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த மாதம் பணி முடிந்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் சென்றபோது அவரை வழிமறித்து 2 திருநங்கைகள் கொடூரமாக தாக்கி அவரிடமிருந்த 18 கிராம் தங்கச்சங்கிலியை பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்து அங்கு நின்ற மாரியப்பன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக        சேர்க்கப்பட்டார். அவர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நகை மீட்பு
தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனி படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வி, ஏட்டு மலர்கொடி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில் மாரியப்பனின் தங்க நகையை பறித்ததாக தென்காசி பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் மாரி என்ற புஷ்பா ஸ்ரீ (32), மணிகண்டன் என்ற மதுபாலா (35) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 18 கிராம் எடையுள்ள தங்க சங்கிலி மீட்கப்பட்டது.
மேலும் 5 திருநங்கைகள் கைது
இதேபோன்று கடந்த மாதம் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் வைத்து அய்யாபுரத்தைச் சேர்ந்த மணி குமார் (55) என்பவரை 5 திருநங்கைகள் தாக்கியதாக தென்காசி போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த திருநங்கைகளை தேடிவந்தனர்.
இந்தநிலையில் போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஏட்டு மலர்கொடி ஆகியோர் நேற்று தலைமறைவாக இருந்த திரு நங்கைகளான சிவா என்ற அம்பிகா, அக்பர் அலி என்ற நஸ்ரியா, மனோஜ் குமார் என்ற ரூபா, அய்யப்பன் என்ற ஸ்ரீநிதி, செண்பகராமன் என்ற மித்ரா ஆகியோரை கைது செய்தனர்.
திருநங்கைகள் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Next Story