விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20-ந்தேதி (வௌ்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20-ந்தேதி (வௌ்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து, அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story