வாலிபர் மீது தாக்குதல்
கொரடாச்சேரி அருகே வாலிபரை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி அருகே அத்திக்கடையை சேர்ந்தவர் உமர்பாரூக் (வயது 31). இவருடைய உறவினர் முகமது ஜமால் (35). இருவரும் ஒரே குடும்பத்தில் அக்கா மற்றும் தங்கையை திருமணம் செய்துள்ளனர். முகமது ஜமால், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கு உமர்பாரூக் தான் காரணம் என அவர் மீது முகமது ஜமால் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் அத்திக்கடை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த உமர்பாரூக்கை முகமது ஜமால் மற்றும் அவரது தம்பி முகமது உசேன் ஆகிய இருவரும் வழிமறித்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த உமர்பாரூக் திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஜமால் மற்றும் அவரது தம்பி முகமது உசேன் ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story