முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம்
ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக இடைநிலை கல்வி பிரிவு நேர்முக உதவியாளராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜன். இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் திடீரென்று இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனியார் பள்ளி நிர்வாகிகள், ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் என பலரும் இவர் மீது சென்னை கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பி வந்த நிலையில் முதல் கட்ட விசாரணை அடிப்படையில் கோவிந்தராஜனை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உத்தரவிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story