எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், மே.18-
உத்தரபிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள பழமையான கியான்வாபி மசூதியில் தொழுகைக்காக இஸ்லாமியர்கள் கை கால் சுத்தம் செய்யும் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாக மசூதியில் கள ஆய்வு செய்ய கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் வாரணாசி கோர்ட்டு கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் நேற்று கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் குடந்தை இப்ராஹிம் தலைமை தாங்கினார். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கலந்துகொண்டு கோர்ட்டு உத்தரவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story