போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் மண்திட்டுகள்
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் மண்திட்டுகள்
நாஞ்சிக்கோட்டை:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் இருந்து மாதவராவ் நகருக்கு ஒரு சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலை அண்ணாநகர், விளார் பகுதிகளுக்கு செல்லும் சாலையோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த பகுதியில் வசிப்பவர்கள் தஞ்சைக்கு வர வேண்டும் என்றால் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். அந்த சாலை ஓரத்தில் உள்ள வடிகாலை தூர்வாரி அதில் உள்ள மண்திட்டுகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ளன. இந்த மண்திட்டுகள் சுவர் போல் காட்சி அளிக்கிறது. இந்த மண்திட்டுகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் மண் திட்டுகள் அகற்றப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள மண்திட்டுகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story