குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கட்டிமாங்கோடு ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திங்கள்சந்தை,
கட்டிமாங்கோடு ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட காரங்காடு, மூலச்சன்விளை பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) கட்சி பெண்கள் சங்க மாவட்ட தலைவர் கார்மல் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தின் போது சீராக குடிநீர் வினியோகம் செய்ய கோரி கோஷம் எழுப்பினர்.
இறுதியில் குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு கொடுத்தனர். அப்போது குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் மணலிகுளம் அருகில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குழாய்கள் மூலம் காரங்காட்டிற்கு குடிநீர் வினியோகம் செய்யவும், ஊற்றுக்குழி கிணற்றை தூர்வாரி சுத்திகரித்து மோட்டார் பொருத்தி மூலச்சன்விளை, காரங்காடு உள்பட சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யவும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
Related Tags :
Next Story