நெல்லையில் வருகிற 21-ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 30,291 பேர் எழுதுகிறார்கள்

நெல்லையில் வருகிற 21-ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 30,291 பேர் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 18 May 2022 5:27 AM IST (Updated: 18 May 2022 5:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வருகிற 21-ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 30,291 பேர் எழுதுகிறார்கள்

நெல்லை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதல் நிலை தேர்வு) தொகுதி-2 அடங்கிய பல்வேறு பணிகளுக்கான போட்டித்தேர்வு வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
நெல்லை, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி பகுதியில் 113 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 30,291 பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வை கண்காணிக்க 113 ஆய்வு குழு அலுவலர்களும், 13 பறக்கும் படை அலுவலர்கள், 27 சுற்றுக்குழு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 117 வீடியோ பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு எழுதுவோர் தங்களது தேர்வு மையங்களை கண்டறிந்து முன்கூட்டியே தேர்வு எழுத வரவேண்டும்.
இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

Next Story