எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 May 2022 7:31 AM IST (Updated: 18 May 2022 7:31 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்:
சேலம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சையது அலி தலைமை தாங்கினார். உத்தரபிரதேச மாநிலத்தில் கியான் வாபி பள்ளிவாசலுக்கு சீல் வைக்கப்பட்டதை கண்டித்தும், வழிபாட்டு தலங்கள் சட்டப்பிரிவு 1991-ஐ அமல்படுத்த கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் ஷெரிப் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story