மேட்டூர் உபரிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்


மேட்டூர் உபரிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 18 May 2022 7:32 AM IST (Updated: 18 May 2022 7:32 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் உபரிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று கூட்ட மன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி தலைவர் ரேவதி ராஜசேகர் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். செயலாளர் சேகர் தீர்மானம் வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக சதாசிவம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை கோனூர், செக்கானேரி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும். மேச்சேரி ஓலைப்பாடி பகுதியில் பொதுத்துறை வங்கி அமைக்க நடவடிக்கை எடுத்தல். மத்திய நிதிக்குழு பணிகள் மூலம் சாக்கடை கால்வாய் அமைத்தல், சாலை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story