டிராக்டர் திருடிய 2 பேர் கைது

டிராக்டர் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
டிராக்டர் திருடிய 2 பேர் கைது
Published on

மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தம்பட்டியை சேர்ந்தவர் ரகுவரன் (வயது 32). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான டிராக்டரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அதனை இரவில் மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவர் போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் டிராக்டரை அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் (40), காளியப்பன் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com