நாமக்கல் அருகே பொன் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

நாமக்கல் அருகே பொன் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
நாமக்கல் அருகே பொன் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
Published on

நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள ஆர்.புளியம்பட்டியில் பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 6-ந் தேதி காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து முளைப்பாரியுடன் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் காயத்ரி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் யாக பூஜை நடந்தது. நேற்று காலை வேத பாராயணத்துடன் மகா கணபதி, நவக்கிரக, குபேர மகாலட்சுமி, சுதர்சன மூலமந்திர ஹோமங்கள் நடைபெற்று, மகா கணபதி அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து பொன் வரதராஜ பெருமாளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com