கர்நாடகத்தில் 10-ந் தேதிக்கு பிறகு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை


கர்நாடகத்தில் 10-ந் தேதிக்கு பிறகு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 3 Feb 2019 9:30 PM GMT (Updated: 4 Feb 2019 8:47 AM GMT)

கர்நாடகத்தில் 10-ந் தேதிக்கு பிறகு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளருமான வேணுகோபால் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. வருகிற 10-ந் தேதிக்கு பிறகு ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கப்படும். கர்நாடக மாநில காங்கிரசில் கருத்துவேறுபாடு இல்லை.

முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும். கூட்டணியில் குழப்பம் இருந்து வருவதாக பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. பா.ஜனதாவினர் எங்கள் கூட்டணி எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சித்து வருகிறார்கள். அவர்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறார்கள். இவ்வாறு வேணுகோபால் கூறினார்.

Next Story