தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்து கேட்கிறது, பா.ஜனதா

தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் பா.ஜனதா கருத்து கேட்க உள்ளது.
புதுடெல்லி,
பொதுமக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. அதன்படி கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வேட்பாளர் தேர்வு என மும்முரம் காட்டி வருகின்றன.
மத்தியில் ஆளும் பா.ஜனதாவும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது. இதற்காக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு, தகவல் தொடர்புக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களை அமைத்து, அதற்கான நிர்வாகிகளையும் ஏற்கனவே நியமித்துவிட்டது.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் அந்த கட்சி முடிவு செய்துள்ளது. குறிப்பாக மக்களின் தேவைகள் குறித்து அவர்களிடமே பரிந்துரைகளை கேட்டு, அவற்றை தங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச்செய்ய கட்சி திட்டமிட்டு உள்ளது. இந்த நடவடிக்கை நேற்று தொடங்கப்பட்டது.
டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்த இதற்கான சிறப்பு நிகழ்ச்சியில், கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் மத்திய மந்திரிகள் மற்றும் முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த திட்டத்தில் முதல் நபராக, நிகழ்ச்சி நடந்த ஓட்டல் பணியாளர் ஒருவரை தேர்வு செய்து அவரது பரிந்துரை கேட்டுக்கொள்ளப்பட்டது.
பின்னர் அமித்ஷா பேசும்போது, ‘இது வெறும் கட்சி சார்பு திட்டமல்ல, மாறாக மக்கள் சார்ந்த திட்டம். தேர்தல் அறிக்கை தயாரிப்பை ஜனநாயகப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் தனித்துவமான இந்த திட்டத்தின் மூலம் ஜனநாயகம் வலுவாகும். இந்த பிரசாரமும், மக்களின் பரிந்துரையும் வலுவான, வளமான இந்தியாவை உருவாக்க உதவும்’ என்று குறிப்பிட்டார்.
உலக அளவில் இது ஒரு மிகப்பெரிய, தனித்துவமிக்க நடவடிக்கை எனக்கூறிய ராஜ்நாத் சிங், நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரிவு மக்களின் கருத்தும், பரிந்துரைகளும் கேட்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே, பிரதமர் நரேந்திர மோடி, இந்த திட்டத்தின் சிறப்பு குறித்து தனது டுவிட்டர் தளத்தில் கருத்துகளை பதிவிட்டார். மேலும் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிறப்பாக தயாரிப்பதற்கு மக்கள் தங்கள் பரிந்துரைகளை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கைக்கான மக்கள் கருத்து கேட்பு நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து 10 கோடி பேரிடம் பரிந்துரைகள் கேட்கப்பட உள்ளன. இதற்காக 4 ஆயிரம் சட்டசபை தொகுதிகளில் 7,700-க்கும் மேற்பட்ட பெட்டிகள் வைக்கப்படுகின்றன. இந்த பணியில் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சி நிர்வாகிகள் ஈடுபடுவார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைத்தவிர சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் மக்களின் கருத்துகள் கேட்கப்படும்.

Related Tags :
Next Story