மாநில செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க.வில் விருப்ப மனு வினியோகம் தொடங்கியது + "||" + Parliament Election: Today in the AIADMK Optional Manu Distribution started

பாராளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க.வில் விருப்ப மனு வினியோகம் தொடங்கியது

பாராளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க.வில் விருப்ப மனு வினியோகம் தொடங்கியது
பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் விருப்ப மனு வினியோகத்தை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தனர்.
சென்னை

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு 40 தொகுதிகளில் 37 இடங்களை வென்றது. பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. தி.மு.க. கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.

தற்போது ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க. புதிய தலைமையுடன் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. தி.மு.க.வும் கருணாநிதி மறைவுக்கு பிறகு, மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் களம் காண உள்ளது. இரு கட்சிகளுமே தங்களின் பலத்தை காட்ட வேண்டிய முக்கிய தருணத்தில் இருக்கிறது. இதனால் தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பு கட்டத்தை எட்டியிருக்கிறது.

கூட்டணி விஷயத்தில், தி.மு.க. தனது அணியை கிட்டத்தட்ட அமைத்து விட்டது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. சார்பில் குழுவும் அமைக்கப்பட்டு விட்டது. தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிரதான கட்சியான அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் ஏற்கனவே குழு அமைத்துள்ளது. ஆனால் இதுவரையில் அ.தி.மு.க. கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக எந்த கட்சியும் இணையவில்லை. பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் கூட்டணிக்கான ரகசிய பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. நடத்தி வருகிறது.

அதே நேரத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வினியோகம் நடைபெற்றது.

சென்னையில் விருப்ப மனு வினியோகத்தை  அ.தி.மு.க.  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  தொடங்கி வைத்தனர். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் விருப்ப மனுக்களை பெற்று கொண்டனர்.

மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மோடியை போல் அல்லாமல் பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர் முலாயம் சிங் யாதவ் - மாயாவதி
மோடியை போல் அல்லாமல், பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர் முலாயம் சிங் யாதவ் என மாயாவதி கூறினார்.
2. “ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு!” மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால், அவருக்கு ஆதரவாக இருக்க போவதாக, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.
3. 5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்
5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் விவரம் வெளியாகி உள்ளது.
4. தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவு
தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
5. 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 சதவீத ஓட்டுப்பதிவு
3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது.
300x250.jpg