தேர்தல் செய்திகள்

மு.க.ஸ்டாலின் கற்பனையில் இருப்பவர்; மு.க.அழகிரி யதார்த்தமானவர் -அமைச்சர் ஜெயக்குமார் + "||" + MK Stalin's imagination; MK Azhagarhi realist- Minister Jayakumar

மு.க.ஸ்டாலின் கற்பனையில் இருப்பவர்; மு.க.அழகிரி யதார்த்தமானவர் -அமைச்சர் ஜெயக்குமார்

மு.க.ஸ்டாலின் கற்பனையில் இருப்பவர்; மு.க.அழகிரி யதார்த்தமானவர் -அமைச்சர் ஜெயக்குமார்
மு.க.ஸ்டாலின் கற்பனையில் இருப்பவர் என்றும் மு.க.அழகிரி யதார்த்தமானவர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னை

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் தங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இதற்கு கூட்டணியில் ஜெயக்குமார் குழப்பம் விளைவிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச்சிறுதைகள் கட்சியினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது;-

தான் எந்தக் கட்சியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றும் பொதுவாக பேசியதாகவும் தெரிவித்தார். ஆனால் அந்தக் கட்சிகள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல தானாக கருத்து தெரிவிக்கின்றன.

தே.மு.தி.க.வுடன் சுமூகமாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். மு.க.ஸ்டாலின் கற்பனையில் இருப்பவர், மு.க.அழகிரி யதார்த்தமானவர் என்று ஜெயக்குமார் கூறினார்.