தேர்தல் செய்திகள்

ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது : கமல்ஹாசன் + "||" + we hope, rajini will support us says Kamal Hassan

ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது : கமல்ஹாசன்

ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது : கமல்ஹாசன்
ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை,

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி, அறிவித்துள்ளது. தன்னுடைய கட்சியின் சின்னத்தை கமல்ஹாசன் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:- “  எங்களின் மக்கள் நீதி மய்யம் கட்சி, மக்களிடம் கூட்டணி வைத்திருக்கிறது. மக்களுடன் கூட்டணி வைத்திருப்பதுதான் பலமான கூட்டணி என்று நான் நினைக்கிறேன். இதுதான் வெற்றிக் கூட்டணி.

எங்களுக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நிச்சயம், தமிழகத்தில் ‘ஒளி பாய்ச்சுவோம்’ எனும் நம்பிக்கை இருக்கிறது. விரைவில் தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிடுவோம்.

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் சட்டம் எப்படி முக்கியமோ அதேபோல், கருணையும் மிகமிக முக்கியம். சட்டம் அதன் போக்கில் செய்யட்டும். நாம் கருணை அடிப்படையில் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யவேண்டும்.அதேபோல், ஏழு பேர் விடுதலை எப்படி முக்கியமோ, ஏழரை கோடி பேரின் விடுதலையும் இங்கே முக்கியம்” என்றார். 

அப்போது கமலிடம், ‘21 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், நிற்கப்போவதில்லை என்று உங்கள் நண்பர் ரஜினிகாந்த் இப்போது அறிவித்திருக்கிறார். அவரிடம் நீங்கள் ஆதரவு கேட்பீர்களா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல், ‘ஆதரவு என்பது கேட்டுப் பெறுவது அல்ல. தாமாகவே கொடுக்கவேண்டும். அப்படி கேட்காமல், தாமாகவே கொடுப்பதும் பெரியவிஷயம். பெறுவதும் பெரியவிஷயம். ரஜினி கொடுப்பார் என்று நம்புகிறோம் என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
2. புரோ கபடி லீக் தொடர்: சென்னையில் இன்று தொடக்கம்
புரோ கபடி லீக் தொடரின் சென்னை சுற்று ஆட்டம் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
3. காஷ்மீர் விவகாரம்: ரஜினிகாந்த் கருத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு
காஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு தெரிவித்துள்ளார்.
4. தேசிய விருது, காஷ்மீர் விவகாரம், அரசியல்கட்சி தொடக்கம் தொடர்பான கேள்விகளுக்கு ரஜினிகாந்தின் பதில்கள்:-
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
5. 45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்!
காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளின் நள்ளிரவில் குடும்பத்துடன் ரஜினிகாந்த் தரிசித்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை