தேர்தல் செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில்அ.தி.மு.க., தி.மு.க. தலா 20 தொகுதிகளில் போட்டிநேரடி மோதலுக்கும் தயாராகிறது + "||" + AIADMK, DMK Competition in 20 volumes

நாடாளுமன்ற தேர்தலில்அ.தி.மு.க., தி.மு.க. தலா 20 தொகுதிகளில் போட்டிநேரடி மோதலுக்கும் தயாராகிறது

நாடாளுமன்ற தேர்தலில்அ.தி.மு.க., தி.மு.க. தலா 20 தொகுதிகளில் போட்டிநேரடி மோதலுக்கும் தயாராகிறது
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும், நேரடி மோதலுக்கும் தயாராகிறது.
சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியை இறுதி செய்யும் தருவாயில் உள்ளது. ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதே நேரத்தில், எதிர்க்கட்சியான தி.மு.க. தங்களது கூட்டணியை இறுதி செய்துவிட்டு, தொகுதிகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, என்.ஆர். காங்கிரஸ், புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சிக்கு தலா ஒரு இடம் என்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

அ.தி.மு.க - தி.மு.க. சம பலம்

இதை வைத்து பார்க்கும்போது, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 20 தொகுதிகள் போக மீதமுள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை களம் இறக்க இருக்கிறது. அதேபோல், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிக்கு தலா 2, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு இடம் என்று மொத்தம் 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட இருக்கிறது.

தி.மு.க.வை பொறுத்தவரை வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சீபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது.

எத்தனை தொகுதிகளில் நேரடி மோதல்

ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில், அக்கட்சி போட்டியிடும் 20 தொகுதிகள் எவை என்பது இன்னும் முடிவாகவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது கண்டறியும் பணி இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால், அ.தி.மு.க. போட்டியிடும் 20 தொகுதிகள் முடிவாகவில்லை.

என்றாலும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சம அளவு பலத்துடன் 20 தொகுதிகளில் போட்டியிட இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால், தேர்தல் களத்தில் டி20 கிரிக்கெட் போல் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. ஆனால், எத்தனை தொகுதிகளில் இரு கட்சிகளும் நேரடியாக மோதும் என்பது அக்கூட்டணிகளில் இருந்து தொகுதிகள் பட்டியல் வெளியான பிறகே தெரியவரும். என்றாலும், அதிக இடங்களில் நேரடி மோதலுக்கும் இரு கட்சிகளும் தயாராகி வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருப்பதால், மேலும் பரபரப்பை எகிறச் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் - ஜி.கே.வாசன் பேட்டி
வருகிற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் என மதுரையில் ஜி.கே.வாசன் கூறினார்.
2. முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை நிலைப்பாடு - டி.டி.வி.தினகரன் பேட்டி
முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளது என ஈரோட்டில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
3. வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடையும் - முத்தரசன் பேட்டி
வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடையும் என்று ஈரோட்டில் முத்தரசன் கூறினார்.
4. கோமா நிலையில் அ.தி.மு.க. ஆட்சி: தமிழ்மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது - மு.க.ஸ்டாலின் பேச்சு
‘கோமா நிலையில் அ.தி.மு.க. ஆட்சி உள்ளது என்றும், தமிழ்மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்றும் தேனி பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
5. சென்னையில் 2–ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிக்கான அனுமதி வழங்குவது எப்போது? அ.தி.மு.க. எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்
2018–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோவின் 107.55 கி.மீ. நீளத்துக்கான 2–வது கட்ட பணிகளை ரூ.85 ஆயிரத்து 47 கோடி செலவில் அமல்படுத்தும் முடிவை, தமிழக அரசு மாநில திட்டமாக தெரிவித்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை