தேர்தல் செய்திகள்

நாகர்கோவிலில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம்ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பேசுகிறார்கள் + "||" + Rahul Gandhi and MK Stalin speak on the same Stage

நாகர்கோவிலில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம்ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பேசுகிறார்கள்

நாகர்கோவிலில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம்ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பேசுகிறார்கள்
நாகர்கோவிலில் இன்று நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் தோன்றி பேசுகிறார்கள்.
சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க., மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த பிரமாண்ட கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னதாக சென்னை வருகிறார்.

ராகுல்காந்தி சென்னை வருகை

இன்று காலை 11.30 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் ராகுல்காந்தி கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், மதியம் 1 மணியளவில் கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலுக்கு வரும் அவர் அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிக்கிறார்.

பின்னர், அங்கிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் புறப்பட்டு செல்லும் அவர், விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து, கார் மூலம் நாகர்கோவிலில் பொதுக்கூட்டம் நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்துக்கு அவர் வருகிறார். மாலை 4 மணிக்கு அங்கு பொதுக்கூட்டம் தொடங்குகிறது.

ஒரே மேடையில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின்

இந்த பொதுக்கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார். ராகுல்காந்தி சிறப்புரை ஆற்றுகிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றிப்பேசுகிறார்கள்.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தொண்டர்களும் பொதுக்கூட்டத்துக்கு வருவார்கள் என்பதால், தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. தோல்விக்கு பின்னர் முதல்முறையாக அமேதி சென்ற ராகுல் காந்தி
பாராளுமன்ற தேர்தலில் பெற்ற தோல்விக்கு பிறகு ராகுல் காந்தி இன்று முதல்முறையாக அமேதி சென்றார். அங்கு கட்சி தொண்டர்களை சந்தித்து ராகுல் காந்தி பேசினார்.
2. அமித்ஷா பற்றி அவதூறான கருத்து: குஜராத் கோர்ட்டு ராகுல் காந்திக்கு மீண்டும் சம்மன்
குஜராத் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பா.ஜனதா பிரமுகர் கிருஷ்ணாவதன் என்பவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
3. ராகுல் பற்றி விமர்சனம்; காங்கிரசார் போராட்டம் : சுப்பிரமணிய சுவாமி மீது வழக்குப்பதிவு
ராகுல் காந்தி குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. பதவி விலகிய பின் தியேட்டரில் சினிமா பார்த்த ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி திரையரங்கு ஒன்றில் படம் பார்க்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
5. ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மும்பை கோர்ட்டில் ஆஜர் : ஜாமீன் வழங்கி உத்தரவு
ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி ஆகியோர் மும்பை கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். அவர்களுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை