தேர்தல் செய்திகள்

மோடி அரசு வாக்குறுதியை நிறைவேற்றாததால் விவசாயிகள் தினசரி தற்கொலை செய்கிறார்கள் - ராகுல் காந்தி + "||" + Farmers committing suicides everyday as Modi govt not keeping promise Rahul

மோடி அரசு வாக்குறுதியை நிறைவேற்றாததால் விவசாயிகள் தினசரி தற்கொலை செய்கிறார்கள் - ராகுல் காந்தி

மோடி அரசு வாக்குறுதியை நிறைவேற்றாததால் விவசாயிகள் தினசரி தற்கொலை செய்கிறார்கள் - ராகுல் காந்தி
மோடி அரசு வாக்குறுதியை நிறைவேற்றாததால் விவசாயிகள் தினசரி தற்கொலை செய்கிறார்கள் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஒடிசா மாநிலத்தில் பிரசாரம் செய்கிறார். பார்கார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தினால் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்து வருகிறார்கள். விவசாயிகள் மேம்பாடு தொடர்பாக மோடி அரசு அதிகமாக பேசுகிறது. ஆனால் விவசாயக் கடன் தள்ளுபடியும் செய்யவில்லை, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தவுமில்லை  என விமர்சனம் செய்துள்ளார். 

ஒடிசா மாநிலத்தின் நெற்களஞ்சியம் என பார்கார் நகரை குறிப்பிட்ட ராகுல் காந்தி, மத்தியில் உள்ள பா.ஜனதா அரசும், இங்குள்ள பிஜு ஜனதா தளம் அரசும் விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என விமர்சனம் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. கூடலூரில், பருவமழை போதியளவு பெய்யாததால் நெல் பயிரிடுவதை கைவிட்ட விவசாயிகள்
கூடலூர் பகுதியில் பருவமழை போதியளவு பெய்யாததால் நெல் பயிரிடுவதை பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டனர்.
2. மும்பை தொடர் குண்டுவெடிப்பு போல தாக்குதல் நடந்தால் மோடி அரசு பதிலடி கொடுக்கும் பியூஸ் கோயல் பேச்சு
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மும்பை ரெயில் தொடர் குண்டுவெடிப்பில் 209 பேர் பலியானது போன்ற சம்பவம், மோடி ஆட்சிக்காலத்தில் நடந்திருந்தால், உரிய பதிலடி கொடுத்திருப்போம் என்று பியூஸ் கோயல் கூறினார்.
3. கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கோஷம்
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி கோ‌ஷம் எழுப்பினார்.
4. காங்கிரஸ் கட்சிக்கு இளம் தலைவரே வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது
ராகுல் காந்தி ராஜினாமாவைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு இளம் தலைவர் ஒருவரையே தலைவராக நியமிக்க வேண்டும் என கட்சியில் கோரிக்கை வலுத்து வருகிறது.
5. மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மிலிந்த் தியோரா விலகல்
மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார்.