பா.ஜ.க., காங்கிரஸ், அ.தி.மு.க. உள்பட 153 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு 143 சதவீதம் அதிகரிப்பு


பா.ஜ.க., காங்கிரஸ், அ.தி.மு.க. உள்பட 153 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு 143 சதவீதம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 March 2019 1:27 PM IST (Updated: 19 March 2019 1:56 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 2009-ம் ஆண்டு எம்.பி.யாக இருந்து, மீண்டும் 2014-ம் ஆண்டு தேர்வான 153 மக்களவை எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 143 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

எம்.பி.க்கள்  தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கைகளை கொண்டு ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. 

ஜனநாயகத்துக்கான சீர்திருத்த சங்க (ஏடிஆர்) கடந்த 2009-ம் ஆண்டு மக்களவை எம்.பி.க்களாக இருந்து 2014-ம் ஆண்டும் மீண்டும் தேர்தலில் வென்று எம்.பி.யாக தேர்வான 153 பேரின் சொத்துக் கணக்குகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த 153 எம்.பி.க்களும்  பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்த சொத்து விவரங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கடந்த 2009-ம் ஆண்டு பா.ஜ.க., காங்கிரஸ், அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட 21 கட்சிகளை சேர்ந்த 153 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு என்பது ரூ.5.50 கோடியாக இருந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு இதே 21 கட்சிகளை சேர்ந்த  153 எம்.பி.க்கள் மீண்டும் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அப்போது இந்த எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ.13.32  கோடியாக அதிகரித்து இருந்துள்ளது.

கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை 21 கட்சிகளை சேர்ந்த 153 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ.7.81 கோடி அதிகரித்துள்ளது.

சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால், கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை இந்த 153 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 143 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தின் பொன்னானி மக்களவை தொகுதியில் இருந்து 2009, 2014-ம் ஆண்டு தேர்வான எம்.பி. இ.டி. முகமது பஷீரின் சொத்து மதிப்பு 2,018 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 22 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு தனது சொத்து மதிப்பு ரூ.6 லட்சம் என்று தெரிவித்திருந்த முகமது பஷீர், 2014-ம் ஆண்டில் ரூ.ஒரு கோடி எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கந்தி தொகுதி எம்.பி. சிசிர்குமார் அதிகாரியின் சொத்து மதிப்பு 1700 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு 10 லட்சமாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு அது ஒரு கோடியாக அதிகரித்துள்ளது. 

ஏ.டி.ஆர். அமைப்பு வெளியிட்ட முதல் 10 இடங்களில் இருக்கும் எம்.பி.க்களின் சொத்துப் பட்டியல்.

அ.தி.மு.க.  எம்.பி. தம்பிதுரையின் சொத்து மதிப்பு 41 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு கரூர் தொகுதியில் இருந்து தேர்வான தம்பிதுரை தாக்கல் செய்தபோது, அவரின் சொத்து மதிப்பு ரூ.9 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு அது ரூ.13 கோடியாக அதிகரித்தது.

இதேபோல திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால் சொத்து மதிப்பு 1281 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு வேணுகோபாலுக்கு 20 லட்சம் ரூபாய் சொத்து இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு அது ரூ.2 கோடியாக அதிகரித்துள்ளது.

திருச்சி தொகுதி எம்.பி. குமாரின் சொத்து மதிப்பு 247 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு பி. குமார் தாக்கல் செய்த கணக்கில் தனக்கு 53 லட்சமாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு ரூ. ஒரு கோடியாக அதிகரித்துள்ளது.

அமேதி தொகுதியில் இருந்து 2009-ம் ஆண்டு தேர்வான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 304 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ராகுல் காந்தி தாக்கல் செய்த சொத்துக் கணக்கில் தனக்கு ரூ.2 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அது அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7 கோடி உயர்ந்து, ரூ.9 கோடியாக அதிகரித்துள்ளது.

ரேபரேலி தொகுதியில் இருந்து 2009-ம் ஆண்டும், 2014-ம் ஆண்டும் தேர்வான சோனியா காந்தியின் சொத்து மதிப்பு 573 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ரூ.ஒரு கோடியாக இருந்த சோனியாவின் சொத்து மதிப்பு கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.9 கோடியாக அதிகரித்துள்ளது.

மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் சொத்து கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டுக்குள் 139 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ரூ.7 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு ரூ.17 கோடியாக அதிகரித்துள்ளது.

பா.ஜ.க. எம்.பி. வருண்காந்தியின் சொத்து மதிப்பு கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டில் 625 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ரூ.4 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டில் ரூ.35 கோடியாக அதிகரித்தது.

இதுதவிர சில எம்.பி.க்களின் சொத்துகளின் அளவும் குறைந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. கருணாகரன் சொத்து மதிப்பு 67 சதவீதமும், பா.ஜ.க. எம்.பி.ஜெகதாம்பியா பால் சொத்து மதிப்பு 64 சதவீதம், பிஜு ஜனதா தளம் எம்.பி. அர்ஜுன் சரண் சேதியின் சொத்து மதிப்பு 39 சதவீதமும் குறைந்துள்ளது.

மேலும், பா.ஜ.க.  எம்.பி. ஓம்பிரகாஷ் யாதவ் சொத்து மதிப்பு 27 சதவீதமும், காங்கிரஸ் எம்.பி. கே.வி. தாமஸ் சொத்து மதிப்பு 21 சதவீதமும் குறைந்துள்ளது.

இதுதவிர கடந்த 2009-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து 72 எம்.பி.க்கள் 2014-ம் ஆண்டு மக்களவைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துமதிப்பு கடந்த 2009-ம் ஆண்டின்போது சராசரியாக ரூ.5 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டில் அது ரூ.7 கோடியாக (140 சதவீதம்) அதிகரித்தது.

அதேபோல காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 2009-ம் ஆண்டில் 28 எம்.பி.க்கள், 2014-ம் ஆண்டுக்கும் தேர்வு செய்யப்பட்டனர். 2009ம் ஆண்டில் இந்த 28 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ.5 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டில் ரூ.12 கோடியாக (109சதவீதம்) அதிகரித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் 12 பேரின் சொத்து மதிப்பு கடந்த 2009-ம் ஆண்டில் சராசரியாக ரூ.93 லட்சமாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டில் இவர்களின் சராசரி ரூ.3 கோடியாக (221 சதவீதம்) அதிகரித்தது.

ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பில் 7 பேர் 2009 மற்றும் 2014-ம் ஆண்டுக்கும் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த 7 பேரின் சராசரி சொத்து மதிப்பு கடந்த 2009-ம் ஆண்டில் ரூ.5 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.23 கோடியாக(298 சதவீதம்) அதிகரித்தது.

அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்கள் 2009 மற்றும் 2014ம் ஆண்டிலும் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் சொத்து மதிப்பு கடந்த 2009ம் ஆண்டில் சராசரியாக ரூ.3 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டில் ரூ.5 கோடியாக (78 சதவீதம்) அதிகரித்தது.

சமாஜ்வாதி கட்சியின் சார்பில் 2009 மற்றும் 2014-ம் ஆண்டில் 3 எம்.பி. க்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். அதில், 2009-ம் ஆண்டில் இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டில் ரூ.15 கோடியாக (293 சதவீதம்) அதிகரித்துள்ளது.


பெயர்

கட்சி

தொகுதி

2009(கோடி)

2014

அதிகரிப்பு

சதவீதம்%

சத்ருஹன்சின்ஹா

பாஜக

பாட்னாசாஹிப்

ரூ.15

ரூ.131

ரூ.116

778

பினாகிமிஸ்ரா

பிஜேடி

ஒடிசா-பூரி

ரூ.29

ரூ.137

ரூ.107

362

சுப்ரியாசுலே

என்சிபி

பாரமதி(மராட்டியம்)

ரூ.51

ரூ.113

ரூ.62

121

ரகுநாத்

பாஜக

குஜராத்(நவ்சரி)

ரூ.24

ரூ.74

ரூ.50

208

போன்சாலே

என்சிபி

சதாரா(மராட்டியம்)

ரூ.11

ரூ.60

ரூ.48

417

ஹர்சிம்ரத்பாதல்

பத்தின்டா(பஞ்சாப்)

ரூ.60

ரூ.108

ரூ.47

79

சாம்பசிவராவ்

டிடிபி

ஆந்திரா-குண்டூர்

ரூ.14

ரூ.59

ரூ.44

305

பிசிமோகன்

பாஜக

மத்தியபெங்களூர்

ரூ.5

ரூ.47

ரூ.42

786

டிகேசுரேஷ்

காங்.

பெங்களூர்(ரூரல்)

ரூ.47

ரூ.85

ரூ.38

82

வருண்காந்தி

பாஜக

.பி.சுல்தான்பூர்

ரூ.4

ரூ.35

ரூ.30

625

 

 

 

 

 

 

 


Next Story