தேர்தல் செய்திகள்

திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் + "||" + DMK leader Mk stalin begains his election campaign

திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்

திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
திருவாரூர் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தொடங்கினார்.
திருவாரூர், 

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. தற்போதைய சூழ்நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் என்று தேர்தல் களத்தில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது.

இருப்பினும், அ.தி.மு.க.- தி.மு.க. இரு அணிகளுக்கிடையே தான் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் புதிய தலைமையுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால், அந்த கட்சிகளின் வெற்றி, தோல்வி குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. அதற்கேற்ப அ.தி.மு.க. வும், தி.மு.க.வும் கடந்த 17 ஆம் தேதி, ஒரே நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.  இரு கட்சிகளும் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. 

இந்த நிலையில்,  இன்று காலை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து மு.க ஸ்டாலின் பிரசாரத்தை துவங்கினார். திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


தொடர்புடைய செய்திகள்

1. பணத்திற்கு அடிமை ஆகாமல் மக்கள் நேர்மையாக வாக்களிப்பார்கள்: மு.க. ஸ்டாலின்
வேலூர் தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
2. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டுள்ளது, நிதி ஒதுக்கப்படவில்லை- மு.க.ஸ்டாலின் பேச்சு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டுள்ளது, நிதி ஒதுக்கப்படவில்லை என மதுரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.
3. கியாஸ், கேபிள் கட்டணம் குறைப்பு : 1½ கோடி பேருக்கு வேலைவாய்ப்பு - தி.மு.க. தேர்தல் அறிக்கை
1½ கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
4. மாணவர்களுக்கு இலவச ரெயில் பயண சேவை - தி.மு.க. தேர்தல் அறிக்கை
மாணவர்களுக்கு இலவச ரெயில் பயண சேவை வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
5. வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை -தி.மு.க தேர்தல் அறிக்கை
நாடாளுமன்றத்தில் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது.