தேர்தல் செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்: பிரியாணி முதல் மண்டபம் வரை விலை பட்டியல் -தேர்தல் ஆணையம் + "||" + Lok Sabha Elections 2019 Price List

பாராளுமன்ற தேர்தல்: பிரியாணி முதல் மண்டபம் வரை விலை பட்டியல் -தேர்தல் ஆணையம்

பாராளுமன்ற தேர்தல்: பிரியாணி முதல் மண்டபம் வரை விலை பட்டியல் -தேர்தல் ஆணையம்
பாராளுமன்ற தேர்தலுக்கு பிரியாணி உள்ளிட்ட பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டு உள்ளது. #LokSabhaElections2019
சென்னை

மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் 70 லட்சம் ரூபாய் வரையும்,  சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் 28 லட்சம் ரூபாய் வரையும் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது மேற்கொள்ளும் செலவுகளைக் கண்காணிக்க செலவின பார்வையாளர்கள்  ஏற்கனவே தமிழகத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

தேர்தல் விலைப்பட்டியல்  விவரம் வருமாறு:

மட்டன் பிரியாணி - ரூ.200 

சிக்கன் பிரியாணி - ரூ.180 

காலை உணவு - ரூ.100

வெஜிடபுள் பிரியாணி - ரூ.100 

மதிய உணவு - ரூ.100 

குளிர்பானங்கள் - ரூ.75 

இளநீர் - ரூ. 40 

தண்ணீர் 1லி - ரூ. 20

பொன்னாடை - ரூ.150

பூ - ரூ.60 

புடவை (பூனம் ) - ரூ.200

டீ சர்ட் - ரூ. 175 

தொப்பி - ரூ.50 

பிளிச்சிங் பவுடர் - ரூ.90

பூசணிக்காய் - ரூ.120 

வாழைமரம் - ரூ.700 

தொழிலாளர் செலவு - ரூ.450  (8 மணி நேரத்திற்கு) ஓட்டுனர்கள் - 695 ரூ ( 8 மணி நேரத்திற்கு)

பட்டாசு -ரூ. 600

மேளம் - ரூ.4500  (4 மணி நேரம்)

மண்டபம் - 2000 முதல் 6000 வரை ஏசி அறைகள் - 9300 ரூ + வரி ( 5stars )ஏசி அறைகள் - 5800ரூ + வரி (3stars )

இதனிடையே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பிற்பகலிலும் பகல் நேரத்திலும் பொதுக்கூட்டங்களால் பெரும் இடையூறு என அமைப்புகள், மக்கள் குழுக்களிடம் இருந்து முறையீடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பம் தாங்காமல் சிலர் உயிரிழந்திருப்பதும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் கோடை காலத்தில் வெயில் நேரத்தில் பொதுக்கூட்டங்களை தவிர்க்கவும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் நிழல் தரும் கூரை, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீர், முதலுதவி வசதிகளை செய்து கொடுத்தால் தான் கடினமான சூழ்நிலைகளில் உயிர் ஆபத்துகள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்
5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் விவரம் வெளியாகி உள்ளது.
2. தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவு
தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
3. 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 சதவீத ஓட்டுப்பதிவு
3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது.
4. 1 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்
1 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் விவரம் வெளியாகி உள்ளது. #LokSabhaElections2019
5. தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீதம் வாக்குப்பதிவு
தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது