தேர்தல் செய்திகள்

கருத்துக் கணிப்புக்கள் என்பது கருத்துத் திணிப்பு -முதல்வர் பழனிசாமி + "||" + Opinion polls are the opinion of the Chief Minister Palani

கருத்துக் கணிப்புக்கள் என்பது கருத்துத் திணிப்பு -முதல்வர் பழனிசாமி

கருத்துக் கணிப்புக்கள் என்பது கருத்துத் திணிப்பு  -முதல்வர் பழனிசாமி
கருத்துக் கணிப்புக்கள் என்பது கருத்துத் திணிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019
சேலம்

சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதி.மு.க. கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை முதலமைச்சர் எடப்பாடி அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது  அவர் கூறியதாவது:-

வலிமையான தலைமையின் கீழ் பாரதம் இருக்க வேண்டும். அந்த பாதுகாப்பு, வலிமையை கொடுக்க கூடிய ஒரே கட்சி பாரதிய ஜனதா மட்டும்தான். நாடு பாதுகாப்பாக இருக்க வலிமை பொருந்திய மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும்.

மக்கள் நலனை தலைமையானதாகக் கொண்டு கூட்டணி அமைத்து  இருக்கிறோம். மத்தியில் ஒரு ஆட்சி, மாநிலத்தில் ஒரு ஆட்சி என்று இருந்தால் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாது. அதிகாரத்திற்காக எதை வேண்டும் என்றாலும் செய்யக் கூடிய ஒரே கட்சி திமுக மட்டும் தான் என கூறினார்.

பின்னர் சேலத்தில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தமிழகத்தின் வளர்ச்சிக்கான அம்சங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ளன. அதிமுக தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி, ஆனால் திமுக கூட்டணி சுயநலமானது. இப்போது நடைபெறுகின்ற தேர்தல் இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடியது.

வெளியாகி வருவது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு. அதிமுக தேர்தல் பணிகளில் தொய்வு ஏதும் இல்லை. அமமுக பிறக்காத குழந்தைக்குப் பெயர்வைத்த அமைப்புதானே தவிர பதிவு செய்து சின்னம் பெற்ற கட்சியல்ல எனவும் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சொந்த கிராமத்தில் உறவினர்களோடு பொங்கல் கொண்டாடிய முதல்வர் பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமது சொந்த கிராமத்தில் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
2. காந்தியின் 150-ஆம் ஆண்டு நிறைவு விழா ஆலோசனை கூட்டம் : டெல்லிக்கு சென்றார் முதல்வர் பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
3. சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
4. தேர்தலை சந்திக்க தி.மு.க. பயப்படுகிறது: மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேட மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
தேர்தலை சந்திக்க தி.மு.க. பயப்படுகிறது என்றும், மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேட மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்றும் கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து தி.மு.க. வழக்கு - எடப்பாடி பழனிசாமி பேட்டி
தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை