தேர்தல் செய்திகள்

தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு + "||" + Tamilisai to contest from Thoothukudi Raja

தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மத்திய பா.ஜனதா தலைமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதாவுக்கு கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பிற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் பா.ஜனதா தரப்பில் அறிவிக்கப்படாமல் இருந்தது. பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சிவகங்கையில் தேசிய செயலாளர் எச்.ராஜா, ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக கூறினார்.

இப்போது இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, பா.ஜனதா வேட்பாளர்களை அறிவித்த போது, இதனை உறுதி செய்துள்ளார்.

தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிடுகிறார் என்பதும் சிவகங்கையில் எச்.ராஜா போட்டியிடுகிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு; ‘கும்பல் கொலை, ஆணவக்கொலையை தடுக்க சட்டம் வேண்டும்’ - நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
கும்பல் கொலை மற்றும் ஆணவக்கொலைகளை தடுக்க உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என கனிமொழி எம்.பி. நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
2. தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் விவரம் : மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கோரிக்கை
தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்தார்.
3. பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
4. தூத்துக்குடியில் தமிழிசை 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு
தூத்துக்குடியில் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
5. தூத்துக்குடியில் கனிமொழி - தமிழிசை இடையிலான போட்டி எப்படி? தந்தி டிவி கருத்துக்கணிப்பு
தூத்துக்குடியில் கனிமொழி மற்றும் தமிழிசை இடையிலான போட்டி எப்படியிருக்கும் என்பது தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.