தேர்தல் செய்திகள்

பீகாரில் காங்கிரஸ்-ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி உறுதியானது + "||" + 2019 LS Polls RJD to Contest 20 Seats, Congress Gets 9 in Bihar

பீகாரில் காங்கிரஸ்-ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி உறுதியானது

பீகாரில் காங்கிரஸ்-ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி உறுதியானது
பீகாரில் காங்கிரஸ் - ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி உறுதியானது.
40 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில்  பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. எதிர்க்கட்சிகள்  வரிசையில் காங்கிரஸ், லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம் இடையே கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்தது. காங்கிரஸ் 11 தொகுதியை கேட்டது. ஆனால் 8  தொகுதிகள்தான் என லாலு கட்சி கூறியது. அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றால் தனியாக போட்டியிடுங்கள் என ராஷ்டீரிய ஜனதா தளம் கூறிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு 9 தொகுதிகள் வழங்கப்படுகிறது. பா.ஜனதா கூட்டணியிலிருந்து பிரிந்த உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்டீரிய லோக் சாம்தா கட்சிக்கு 5 தொகுதிகள்  வழங்கப்பட்டுள்ளது. பிற உதிரி கட்சிகளுக்கு மீதம் உள்ள தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு; தலைவர்கள் இரங்கல்
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
2. இந்தியா அவசர நிதிநிலை தேவையை சந்தித்து கொண்டிருக்கிறது : அபிஷேக் சிங்வி
இந்தியா பொருளாதாரத்தில் மந்தநிலையையும், அவசர நிதிநிலை தேவையையும் எதிர்க்கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
3. சுயேட்சை எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.-47 ரக துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள்
பீகார் மாநிலத்தில் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் ஏ.கே.-47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
4. ம.தி.மு.க.-காங்கிரஸ் கருத்து மோதலால் கூட்டணிக்கு பாதிப்பில்லை - தொல்.திருமாவளவன் பேட்டி
“ம.தி.மு.க.-காங்கிரஸ் இடையே எழுந்த கருத்து மோதலால் கூட்டணிக்கு பாதிப்பில்லை” என தொல்.திருமாவளவன் கூறினார்.
5. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை கொறடா பா.ஜனதாவில் இணைந்தார்
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலங்களவை கொறடா பா.ஜனதா கட்சியில் இணைந்தார்.