தேர்தல் செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்; 11 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. + "||" + BJP releases list of 11 candidates for the upcoming Lok Sabha elections

நாடாளுமன்ற தேர்தல்; 11 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.

நாடாளுமன்ற தேர்தல்; 11 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.
நாடாளுமன்ற தேர்தலுக்கான 11 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் இன்று 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் அறிவித்தார்.

இதேபோன்று நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 11 வேட்பாளர்கள் அடங்கிய மற்றொரு பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டு உள்ளது.  இதில் தெலுங்கானாவின் 6 வேட்பாளர்கள், உத்தர பிரதேசத்தின் 3 வேட்பாளர்கள், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றில் இருந்து தலா ஒரு வேட்பாளர் பற்றிய பெயர் பட்டியலை அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு முடிவு செய்து வெளியிட்டது.

இவற்றில் தெலுங்கானாவில் 2 தனி தொகுதிகளும், உத்தர பிரதேசத்தில் 2 தனி தொகுதிகளும் உள்ளன.

தெலுங்கானாவில் அடிலாபாத் (தனி) தொகுதியில் சோயம் பாபு ராவ், பெடப்பள்ளி (தனி) தொகுதியில் எஸ். குமார், ஜாஹீராபாத் தொகுதியில் பனல லட்சும ரெட்டி, ஐதராபாத் தொகுதியில் டாக்டர் பகவந்த் ராவ், செல்வெல்லா தொகுதியில் பி. ஜனார்தன ரெட்டி, கம்மம் தொகுதியில் வாசுதேவ ராவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதேபோன்று கேரளாவின் பத்தனம்திட்டா தொகுதியில் கே. சுரேந்திரன், உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதியில் பிரதீப் சவுத்ரி, நாகினா (தனி) தொகுதியில் டாக்டர் யஷ்வந்த், புலந்த்சாஹர் (தனி) தொகுதியில் போலா சிங் ஆகியோரும், மேற்கு வங்காளத்தின் ஜாங்கிபூர் தொகுதியில் மபூஜா கத்தூன் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; பா.ஜ.க. கோரிக்கை
மத்திய பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பா.ஜ.க. இன்று கோரிக்கை விடுத்துள்ளது.
2. இரு கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வை இணைக்கும் நிலை உருவாகி வருகிறது - டி.டி.வி.தினகரன் கடும் தாக்கு
பா.ஜனதாவோடு அ.தி.மு.க.வை இணைக்கும் நிலை உருவாகி வருகிறது என தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார்.
3. நேர்மையான ஆட்சி வேண்டுமா? ஊழல் ஆட்சி வேண்டுமா? பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ஆவேச பேச்சு
நேர்மையான ஆட்சி வேண்டுமா? ஊழல் ஆட்சி வேண்டுமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என ஒடிசா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் பேசினார்.
4. “ஏழைகளை ஓட்டு வங்கியாக கருதி காங்கிரஸ் துரோகம் செய்கிறது” - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ஏழைகளை ஓட்டு வங்கியாக கருதும் காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்கு பிறகு ஏழைகளுக்கு துரோகம் செய்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
5. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் என உறுதி அளிக்கிறேன்- அமித்ஷா
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் என உறுதி அளிக்கிறேன் என தூத்துக்குடியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.