பா.ஜனதாவை தோற்கடிக்க தொகுதியை விட்டுத்தராத எதிர்க்கட்சி தலைவர்கள் இந்திய கம்யூனிஸ்டு பரபரப்பு குற்றச்சாட்டு
எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் பா.ஜனதாவுக்கு எதிரானவர்களாகத்தான் உள்ளனர். ஆனால், அவர்கள் பா.ஜனதாவை வீழ்த்த தொகுதிகளை விட்டுத்தரவோ, தியாகம் செய்யவோ தயாராக இல்லை.
புதுடெல்லி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் பா.ஜனதாவுக்கு எதிரானவர்களாகத்தான் உள்ளனர். ஆனால், அவர்கள் பா.ஜனதாவை வீழ்த்த தொகுதிகளை விட்டுத்தரவோ, தியாகம் செய்யவோ தயாராக இல்லை. தேசநலனை விட உள்ளூர் நலனையே முக்கியமாக நினைத்தார்கள். அதனால்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி முயற்சி தோல்வி அடைந்தது.
மேலும், மாநில அளவிலான கூட்டணி பேச்சுவார்த்தையை மாநில காங்கிரசே தீர்மானிக்கட்டும் என்று அளவுக்கு அதிகமாக ராகுல் காந்தி சுதந்திரம் கொடுத்து விட்டார். அதுவும் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைய காரணம். காங்கிரஸ், பரந்த இதயத்துடன் நடந்திருக்க வேண்டும். இனிமேல், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிதான் ஒரே வழி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story