தேர்தல் செய்திகள்

அரசியல் சட்ட பொறுப்பை உணர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்; மு.க. ஸ்டாலின் + "||" + The Election Commission of India shall act to recognize the constitutional responsibility; MK Stalin

அரசியல் சட்ட பொறுப்பை உணர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்; மு.க. ஸ்டாலின்

அரசியல் சட்ட பொறுப்பை உணர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்; மு.க. ஸ்டாலின்
அரசியல் சட்ட பொறுப்பை உணர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தால் இடைத்தேர்தல் நடத்துவதற்கு கூட சட்டப்போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  3 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையுத்தரவு எதுவும் இல்லாத நிலையிலும் தேர்தல் ஆணையம் அங்கு தேர்தலை ஒத்தி வைத்துள்ளது.

தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் 3 வருடங்களுக்கு மேல் உள்ள மாவட்ட ஆட்சியர்களை தேர்தல் ஆணையம் மாற்ற வேண்டும்.

கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்குவதில் தமிழகத்தை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் வரலாறு காணாத வகையில் பாரபட்சமாகவும், ஒருதலைப்பட்சமாகவும் செயல்படுகிறது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்ட பொறுப்பை உணர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. ஆட்சியில் இல்லாத 8 வருடங்களில் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம்; மு.க. ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. ஆட்சியில் இல்லாத 8 வருடங்களில் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம் என மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
2. பா.ஜ.க.வுடன் பேசினேன் என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்; மு.க. ஸ்டாலின்
பா.ஜ.க.வுடன் பேசினேன் என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
3. அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை நடத்திடாமல் இருப்பது குடிநீர், சாலை வசதிகள் கிடைக்காததற்கு காரணம்; மு.க. ஸ்டாலின்
அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை நடத்திடாமல் இருப்பது குடிநீர், சாலை வசதிகள் போன்றவை கிடைக்காததற்கு காரணம் என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
4. தி.மு.க.வின் செயல் வீராங்கனையாக இருந்தவர் வசந்தி ஸ்டான்லி; மு.க. ஸ்டாலின்
தி.மு.க.வின் செயல் வீராங்கனையாக இருந்தவர் வசந்தி ஸ்டான்லி என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை; மு.க. ஸ்டாலின்
தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.