தேர்தல் செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளரை மசூத் அசாரின் மருமகன் என குறிப்பிட்ட ஆதித்யநாத் + "||" + Adityanath, who is the son-in-law of Masood Azar, is the Congress candidate

காங்கிரஸ் வேட்பாளரை மசூத் அசாரின் மருமகன் என குறிப்பிட்ட ஆதித்யநாத்

காங்கிரஸ் வேட்பாளரை மசூத் அசாரின் மருமகன் என குறிப்பிட்ட ஆதித்யநாத்
காங்கிரஸ் வேட்பாளரை மசூத் அசாரின் மருமகன் என ஆதித்யநாத் கூறினார்.
லக்னோ,

உத்தரபிரதேசத்தின் சகாரன்பூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராகவ் லகன்பாலை ஆதரித்து மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தார். அப்போது அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இம்ரான் மசூத்தை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார்.


அவர் கூறுகையில், ‘ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் மருகமன் (காங்கிரஸ் வேட்பாளர்) இந்த தொகுதிக்குள் நுழைந்து பயங்கரவாதியின் மொழிகளில் பேசி வருகிறார். புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரின் மொழிகளில் பேசுவோரை இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்’ என்று கூறினார்.

மேலும் பயங்கரவாதம் தொடர்பாக எதிர்க்கட்சிகளையும் அவர் கடுமையாக குற்றம் சாட்டினார். அவர் கூறும்போது, ‘பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடியின் சிகிச்சை ஒன்றேயொன்று தான். அது, தோட்டாக்களும், வெடிகுண்டுகளுமே. ஆனால் சில கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குகின்றன’ என்று தெரிவித்தார்.

இதைப்போல சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்து பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் நேர்காணல் 29-ந் தேதி தொடங்குகிறது
மராட்டியத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன.
2. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்?
பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசார் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
3. சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவித்தது சாதனை : ஐ.நா. சபையில் உறுப்புநாடுகள் பெருமிதம்
இந்தியாவில் கடந்த பிப்ரவரி 14–ந் தேதி துணை ராணுவ வீரர்களை குறிவைத்து புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியது, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு ஆகும்.
4. பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு
பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டான்.
5. சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் பெயர் விவகாரம் சரியாக தீர்க்கப்பட வேண்டும் -சீனா
சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் பெயர் விவகாரம் சரியாக தீர்க்கப்பட வேண்டும் என சீனா கூறி உள்ளது.