தேர்தல் செய்திகள்

“இந்திய ராணுவத்தை கேள்வி கேட்பவர்கள் ஆன்டி- இந்தியன்ஸ்” எச்.ராஜா பேட்டி + "||" + People who are asking questions to army are anti indians,

“இந்திய ராணுவத்தை கேள்வி கேட்பவர்கள் ஆன்டி- இந்தியன்ஸ்” எச்.ராஜா பேட்டி

“இந்திய ராணுவத்தை கேள்வி கேட்பவர்கள் ஆன்டி- இந்தியன்ஸ்” எச்.ராஜா பேட்டி
இந்திய ராணுவத்தை கேள்வி கேட்பவர்கள் ஆன்டி- இந்தியன்ஸ் என எச். ராஜா கூறியுள்ளார்.
இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை குண்டுகளை வீசி அழித்தது. இதில் 250க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார். இதேபோன்று பிற பா.ஜனதா தலைவர்களும் பேசினர். ஆனால் விமானப்படை எங்களுக்கான இலக்கை நாங்கள் தாக்கினோம் என்று மட்டும் தெரிவித்தது. இதனையடுத்து பயங்கரவாதிகள் சாவு எண்ணிக்கை தொடர்பாக பா.ஜனதாவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது. 

இந்நிலையில் பிபிசி தமிழுக்கு பேட்டியளித்து பேசிய சிவகங்கை பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவிடம்,  கேள்வி கேட்பவர்களை ஆன்டி - இந்தியன் என்று சொல்கிறீர்கள்.. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்கிறீர்கள்.. என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்து பேசிய எச்.ராஜா, நாட்டை வெட்டிப் பிளப்பேன் என்பவர்கள், தமிழ்நாடு இந்தியாவின் அண்டை நாடு என்பவர்கள் ஆன்டி - இந்தியன்தான். அமெரிக்கா பாகிஸ்தானுக்குள் புகுந்து பின்லேடனை கொன்றபோது, அமெரிக்கர்கள் யாரும் பின்லேடனின் உடல் எங்கே என கேட்கவில்லை.

ஆனால், புல்வாமா தாக்குதலையடுத்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தினால், இறந்துபோன பாகிஸ்தான் வீரர்களின் உடலைக் காட்ட வேண்டுமெனக் கேட்கிறார்கள் சிலர். இப்படி ராணுவத்தை கேள்வி கேட்பது தேச விரோதமில்லையா.. அவர்கள் ஆன்டி - இந்தியன்தானே என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் பிரதமர் மகன் பா.ஜனதாவில் இணைந்தார்
முன்னாள் பிரதமர் மகன் பா.ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
2. ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் கூட்டணி அரசை கவிழ்க்க ரகசியமாக காய் நகர்த்திய பா.ஜனதா - பரபரப்பு தகவல்கள்
கூட்டணி அரசை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் பா.ஜனதா ரகசியமாக காய்நகர்த்திய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. மாநிலங்களவை இடைத்தேர்தல் : குஜராத்தில் 65 எம்.எல்.ஏ.க்களை இடம்மாற்றுகிறது காங்கிரஸ்
குஜராத் மாநிலத்தில் இரண்டு மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான இடைத்தேர்தல் வரும் 5-ம் தேதி நடக்கிறது.
4. லஞ்ச–ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு, யோகி அரசு அதிரடி
உ.பி.யில் லஞ்ச–ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேரை கட்டாய பணி ஓய்வில் அனுப்பி யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
5. கர்நாடக காங்கிரசுக்கு அதிகரிக்கும் பிரச்சனை, 2 எம்.எல்.ஏ.க்கள் விலகல்; உன்னிப்பாக கவனிக்கும் பா.ஜனதா
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கிய பின்னர் மற்றொரு எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிக்ஹோலியும் சபாநாயகரிடம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.