தேர்தல் செய்திகள்

அ.ம.மு.க.விற்கு தேர்தல் ஆணையம் ஒரே சின்னம் ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது; தினகரன் + "||" + There is hope that the EC will allocate a single symbol for the AMMK; Dinakaran

அ.ம.மு.க.விற்கு தேர்தல் ஆணையம் ஒரே சின்னம் ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது; தினகரன்

அ.ம.மு.க.விற்கு தேர்தல் ஆணையம் ஒரே சின்னம் ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது; தினகரன்
அ.ம.மு.க.விற்கு தேர்தல் ஆணையம் ஒரே சின்னம் ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட கோரி, டி.டி.வி. தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அ.ம.மு.க.வுக்கு பொதுவான ஒரு சின்னத்தை ஏன் ஒதுக்க கூடாது? என தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி விடுத்த தலைமை நீதிபதி, ஒரே குழுவில் உள்ளோருக்கு வெவ்வேறு சின்னத்தை வழங்கினால் அவர்களது அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என கூறினார்.  மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பொதுசின்னத்தை வழங்க பரிசீலிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட பொது சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் டி.டி.வி. தினகரன் மனு செய்துள்ளார்.

அ.ம.மு.க.விற்கான தேர்தல் பிரசாரத்தை தினகரன் தொடங்க உள்ள நிலையில், முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அவருடன் தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களும் உடன் சென்றிருந்தனர்.

இதன்பின் தினகரன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, 59 தொகுதிகளிலும் அ.ம.மு.க.விற்கு தேர்தல் ஆணையம் ஒரே சின்னம் ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.