தேர்தல் செய்திகள்

கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் வருமான வரிச்சோதனை; இதுதான் மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்-குமாரசாமி + "||" + IT Dept seized Rs 1.66 crore cash in Karnataka raids

கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் வருமான வரிச்சோதனை; இதுதான் மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்-குமாரசாமி

கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் வருமான வரிச்சோதனை; இதுதான் மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்-குமாரசாமி
கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் 15 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக ஏப்ரல் 18, 23-ந் தேதிகளில் நடக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல் நிறைவடைந்தது. மனுக்களை வாபஸ் பெற நாளை வெள்ளிக்கிழமை கடைசி நாள் ஆகும். இதனால் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில் கர்நாடகத்தில் இன்று வருமான வரி சோதனை நடந்தது. ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சிறிய நீர்ப்பாசனத்துறை மந்திரி சி.எஸ்.புட்டராஜு வீடு, முதல்-மந்திரி குமாரசாமியின் அண்ணனும், பொதுப்பணித்துறை மந்திரியுமான எச்.டி.ரேவண்ணாவின் நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்கள் என்று சுமார் 15 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

இந்த சோதனைக்கு காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

வருமான வரி சோதனையை கண்டித்து, முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், பிரதமர் மோடியின் உண்மையான துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) இந்த வருமான வரி சோதனை மூலம் பகிரங்கமாகியுள்ளது. வருமான வரித்துறை அதிகாரி பாலகிருஷ்ணனுக்கு அரசியலமைப்பு பதவி வழங்குவதாக பிரதமர் உறுதியளித்து, அதன் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குகிறார். தேர்தல் நேரத்தில் அரசு எந்திரம், ஊழல் அதிகாரிகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை துன்புறுத்துவது என்பது மிகவும் வருந்தத்தக்கது என தெரிவித்து இருந்தார். வருமான வரித்துறை பா.ஜனதாவின் கைப்பாவையாக செயல்படுகிறது, அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் சோதனையில் ரூ. 1.66 கோடி சிக்கியது என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாளை குஜராத் செல்ல இருப்பதாக பிரதமர் மோடி டுவிட்
நாளை மாலை குஜராத் சென்று தனது தாயாரிடம் ஆசி பெற இருப்பதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
2. பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
பாரதீய ஜனதா கூட்டணி-349; காங். கூட்டணி-96; இதர கட்சிகள்-97. நாடாளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.
3. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து
நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
4. கர்நாடகாவில் 23 இடங்களில் பாஜக முன்னிலை
நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் 23 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
5. ராஜீவ் காந்தி நினைவுநாள்: பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி
பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் ராஜீவ் காந்திக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார்.