தேர்தல் செய்திகள்

மத்திய அரசு, தேர்தல் கமிஷன் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை - சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது + "||" + The Central Government, the Court contempt of the Election Commission action - The Supreme Court issued a notice

மத்திய அரசு, தேர்தல் கமிஷன் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை - சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது

மத்திய அரசு, தேர்தல் கமிஷன் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை - சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது
வேட்பாளர்கள் குற்றவழக்குகளை விளம்பரம் செய்யவில்லை என்று மத்திய அரசு, தேர்தல் கமிஷன் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.
புதுடெல்லி,

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல்சாசன அமர்வு, தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் பற்றிய விவரங்களை பத்திரிகைகள் மற்றும் செய்தி தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தது.


இந்த நிலையில் வக்கீல் அஷ்வினிகுமார் உபாத்யாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், வேட்பாளர்கள் பிரபலம் இல்லாத பத்திரிகைகள் மற்றும் செய்தி சேனல்களில் குற்ற வழக்கு விவரங்களை விளம்பரம் செய்தனர். சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றபோது அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களின் வழக்கு விவரங்களை பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யவில்லை. அவர்கள் மீது தேர்தல் கமிஷன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தேர்தல் கமிஷன் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பாலி நாரிமன், வினீத் சரண் ஆகியோர் கொண்ட அமர்வு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றாததற்கு விளக்கம் அளிக்கும்படி 3 தேர்தல் கமிஷனர்கள், மத்திய சட்டத்துறை செயலாளர், மத்திய அமைச்சரவை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. 49 பிரபலங்களுக்கு எதிராக மத்திய அரசு எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை; மத்திய மந்திரி ஜவடேகர்
இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்களுக்கு எதிராக மத்திய அரசு எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று மத்திய மந்திரி ஜவடேகர் கூறியுள்ளார்.
3. மத்திய அரசிடம் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய வியூகம் இல்லை - காங்கிரஸ் தாக்கு
மத்திய அரசிடம் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய வியூகம் இல்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
4. மத்திய அரசு தொடர்ந்து பழிவாங்கும் அரசியல் செய்கிறது - தேவேகவுடா குற்றச்சாட்டு
ஆட்சி, அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்றும், மத்திய அரசு தொடர்ந்து பழிவாங்கும் அரசியல் செய்வதாகவும் தேவேகவுடா குற்றம்சாட்டி உள்ளார்.
5. மத்தியபிரதேசம்: கோர்ட்டில் நீதிபதி திடீர் மாயம்
மத்தியபிரதேச மாநிலத்தில் கோர்ட்டுக்கு வந்த நீதிபதி ஒருவர் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.