தேர்தல் செய்திகள்

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா வருகை இல.கணேசன் தகவல் + "||" + In Tamil Nadu Election campaign PM Modi, visit Amit Shah Ila.Ganesan Information

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா வருகை இல.கணேசன் தகவல்

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா வருகை இல.கணேசன் தகவல்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் வருகிறார்கள் என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடு விண்வெளியில் முன்னேறியிருக்கிறது என்பதை பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது தேர்தல் விதிமுறை மீறல் இல்லை. பா.ஜ.க. தேசிய செயலாளரும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான எச்.ராஜாவை பற்றி மிகவும் மட்டமாக, பேசக்கூடாத வார்த்தைகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.


எச்.ராஜாவை தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் மிகவும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை மு.க.ஸ்டாலின் முன் வைத்தது கண்டிக்கத்தக்கது. அதற்கு பதிலாக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் உள்ள வேட்பாளர்களின் லட்சணங்களை மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் சொல்லலாம்.

கிருஷ்ண பகவான் குறித்து தெரிவித்த கருத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மன்னிப்பு கேட்கவேண்டும்.

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்காது. பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 2-ந்தேதி (நாளை மறுதினம்) தமிழகம் வருகிறார். அன்றைய தினம் காலை 11 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதனைதொடர்ந்து சிவகங்கை மற்றும் கோவையில் நடைபெறும் கூட்டங்களிலும் அமித்ஷா பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 8-ந்தேதி கோவையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எதை சொல்கிறாரோ, அதையே மு.க.ஸ்டாலினும் சொல்கிறார். மு.க.ஸ்டாலினுக்கு சுய புத்தி கொஞ்சம் கூட இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களை பிரித்து பார்த்து ஓட்டு போட்ட வாக்காளர்கள் 20 தொகுதி புள்ளி விவரம் நிரூபணம்
நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என்று பிரித்து பார்த்து இருவேறு மனநிலையில் தமிழக வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். 20 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மூலம் அது நிரூபணமாகியுள்ளது.
2. நாடாளுமன்றத் தேர்தல்: 7 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது
நாடாளுமன்றத் தேர்தலில் 7 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் மாலை 6 மணியுடன் முடிந்தது.
3. ஹர்திக் படேலை கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு
குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டு இருந்த ஹர்திக் படேல் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
4. ஈரோட்டில் தேர்தல் பிரசாரம்: ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்துவிட்டார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்து விட்டார் என்று ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார்.
5. தேர்தல் பிரசாரம் செய்ய யோகிக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.