தேர்தல் செய்திகள்

34 சிறுமிகள் பலாத்கார வழக்கு; ஜாமீனில் வெளிவந்த மஞ்சு வர்மா மத்திய மந்திரி கூட்டத்தில் கலந்து கொண்டதால் சர்ச்சை + "||" + Muzaffarpur shelter home case; Manju Verma who is out on bail seen on Union Minister stage

34 சிறுமிகள் பலாத்கார வழக்கு; ஜாமீனில் வெளிவந்த மஞ்சு வர்மா மத்திய மந்திரி கூட்டத்தில் கலந்து கொண்டதால் சர்ச்சை

34 சிறுமிகள் பலாத்கார வழக்கு; ஜாமீனில் வெளிவந்த மஞ்சு வர்மா மத்திய மந்திரி கூட்டத்தில் கலந்து கொண்டதால் சர்ச்சை
பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா மத்திய மந்திரியின் மேடை பிரசாரத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெகுசராய்,

பீகார் மாநிலம் முசாபர்பூரில், மாநில அரசின் நிதி உதவியுடன் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வரும் காப்பகம் உள்ளது. அதில், மும்பை அமைப்பு நடத்திய ஆய்வில், 34 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து தொண்டு நிறுவன அதிபர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மாநில சமூக நலத்துறை மந்திரி மஞ்சு வர்மா பதவி விலகினார். மாநில அரசு, இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது. வழக்கு விசாரணையில் சிறுமிகளுக்கு நடந்த கொடூரம் தொடர்பான தகவல்கள் வெளியாகின.

இதுபற்றி சி.பி.ஐ. தாக்கல் செய்த 73 பக்க குற்றப்பத்திரிக்கையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பிராஜேஷ் தாகூர், சிறுமிகளை சிறிய ஆடையுடன் ஆபாச நடனம் ஆட செய்துள்ளான், காப்பகத்திற்கு வந்தவர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  ஆபாச நடனம் ஆட மறுக்கும் சிறுமிகளுக்கு இரவு ஒரு ரொட்டியும், உப்பும் மட்டும் உணவாக கொடுக்கப்படும். சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு நல்ல உணவு கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வளவு கொடுமைகள் அங்கு அரங்கேறியும் அதிகாரிகள் அனைத்தையும் தெரிந்து அமைதி காத்துள்ளனர். தாகூரை சந்திக்க விருந்தினராக வரும் நபர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தாகூர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என்றும் பாதிக்கப்பட்ட 33 சிறுமிகள் உள்பட 101 பேர் சாட்சிகள் எனவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. 

இவ்விவகாரத்தில் பீகார் அரசு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.  இப்போது வழக்கு தொடர்பான விசாரணையை பீகாரில் இருந்து டெல்லிக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விசாரணையை 6 மாதங்களுக்குள் முழுமையாக முடிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றச்சாட்டு எழுந்தவுடன் தனது மந்திரி பதவியில் இருந்து மஞ்சு வர்மா விலகினார்.  இந்த வழக்கில் ஆயுத தடை சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.  இதன்பின் ஜாமீன் பெற்று வெளியே உள்ளார்.  இந்நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் கிரிராஜ் சிங் பெகுசராய் நகரில் நேற்று கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் பீகார் மந்திரியான மஞ்சு வர்மா மேடையில் மற்ற தலைவர்களுடன் ஒன்றாக அமர்ந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. “இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்” மத்திய மந்திரி அமித்ஷா கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு - தலைவர்கள் கண்டனம்
“இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்” என்ற உள்துறை மந்திரி அமித்ஷாவின் கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவரது கருத்து நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் என கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
2. புவி ஈர்ப்பு விசை: ஐன்ஸ்டீன் பெயரை கூறி நான் தவறு செய்து விட்டேன் - பியூஷ் கோயல்
ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்பதற்கு பதிலாக ஐன்ஸ்டீன் என கூறி நான் தவறு செய்து விட்டேன் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.
3. மத்திய மந்திரியுடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு - கல்விக்கொள்கை தொடர்பான அறிக்கையை அளித்தனர்
கல்விக்கொள்கை தொடர்பாக தி.மு.க. குழு தயாரித்த அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியிடம் தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று நேரில் அளித்தனர்.
4. மத்திய மந்திரி ஆனது எப்படி? - சாரங்கி உருக்கம்
மத்திய மந்திரி ஆனது எப்படி என்பது குறித்து சாரங்கி விவரித்துள்ளார்.
5. பாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்
பாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் இன்று மரணம் அடைந்து உள்ளார்.