தேர்தல் செய்திகள்

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டி; காங்கிரஸ் அறிவிப்பு + "||" + AK Antony, Congress: Rahul ji to contest from Wayanad in Kerala

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டி; காங்கிரஸ் அறிவிப்பு

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டி; காங்கிரஸ் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கொச்சி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த முறை போட்டியிட்டு வென்ற அமேதி தொகுதியில் இம்முறை போட்டியிடுகிறார்.

அவர் கேரளாவில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.  இதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.  இதனை தொடர்ந்து கேரளாவின் வயநாடு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரியான ஏ.கே. அந்தோணி அறிவித்துள்ளார்.

இதனால் அவர் அமேதி, வயநாடு என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.  கடந்த 13வது பொது தேர்தலில் இந்த தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  இதன்பின் 14வது, 15வது மற்றும் கடைசியாக நடந்த 16வது பொது தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங். தலைவர் ராகுல் காந்தியை இன்று மயாவதி சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார்.
2. மோடி என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறார், ஆனால் நான் அவரை அவமதிக்க மாட்டேன் - ராகுல் காந்தி
பிரதமர் மோடி என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறார், ஆனால் நான் அவரை அவமதிக்க மாட்டேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
3. சாம் பிட்ரோடா கருத்து ஏற்க முடியாதது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல் காந்தி திட்டவட்டம்
சாம் பிட்ரோடா கருத்து ஏற்க முடியாதது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
4. காங்கிரஸ் கட்சி தனக்கு எதிராக பயன்படுத்திய அவதூறு வார்த்தைகளை பட்டியலிட்ட பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சி தனக்கு எதிராக பயன்படுத்திய அவதூறு வார்த்தைகளை பிரதமர் மோடி இன்று பட்டியலிட்டு உள்ளார். #PMModi
5. பிரதமர் மோடிக்கு என்னிடமிருப்பது அன்புமட்டும்தான் - ராகுல் காந்தி
பிரதமர் மோடி என்னுடைய குடும்பத்தை எவ்வளவு வெறுக்கிறார் என்பது பிரச்சனை கிடையாது, என்னிடம் அவருக்கு இருப்பது அன்புமட்டும்தான் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.