தெலுங்கானாவில் காங்கிரசில் இருந்து மூத்த தலைவர் விலகல்: தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கிடைக்காததால் அதிருப்தி


தெலுங்கானாவில் காங்கிரசில் இருந்து மூத்த தலைவர் விலகல்: தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கிடைக்காததால் அதிருப்தி
x
தினத்தந்தி 31 March 2019 9:15 PM GMT (Updated: 31 March 2019 9:15 PM GMT)

தெலுங்கானாவில் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் காங்கிரசில் இருந்து மூத்த தலைவர் விலகி உள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.சி.யாக இருந்தவர் சுதாகர் ரெட்டி. மாநில காங்கிரசில் முன்னணி தலைவராக இருந்த இவர், தேர்தலில் போட்டியிட சீட் கேட்டதாகவும், ஆனால் அதற்கு கட்சித்தலைமை மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். கட்சித்தலைவர் ராகுல் காந்திக்கு நேற்று அவர் ராஜினாமா கடிதம் அனுப்பினார்.

கட்சியில் உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு தேர்தலில் சீட் வழங்கப்படுவதில்லை என அவர் குற்றம் சாட்டி உள்ளார். காங்கிரசில் இருந்து விலகிய சுதாகர் ரெட்டி, பிரதமர் மோடியை சந்தித்து பா.ஜனதாவில் இணைவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சுதாகர் ரெட்டி விலகியது தெலுங்கானாவில் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அங்கு சமீபத்தில்தான் காங்கிரசில் இருந்து 10 எம்.எல்.ஏ.க்கள் விலகி ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story