தேர்தல் செய்திகள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு + "||" + Congress election statement released today

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது. அதில் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பல்வேறு வாழ்க்கை நிலையில் உள்ள மக்களின் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிடுகிறார்.


இந்த தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு, கல்வி, சுகாதாரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது. இதுதவிர 5 கோடி ஏழை மக்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வருமான உத்தரவாத திட்டம், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, இளைஞர்கள் தொழில் தொடங்க கடன், சிறு வியாபாரிகள் நலன், ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி போன்ற பல திட்டங்களும் இதில் இடம்பெறும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் சோனியா காந்தியை மாயாவதி இன்று சந்திக்கிறார்
டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று சந்திக்கிறார்.
2. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துகளை கூற வேண்டாம் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சியினருக்கு தினேஷ் குண்டுராவ் வேண்டுகோள்
கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துகளை கூற வேண்டாம் என்று காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சியினருக்கு தினேஷ் குண்டுராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. நாடாளுமன்ற தேர்தலில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு
நாடாளுமன்ற தேர்தலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 59 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
4. பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது - காங்கிரஸ்
பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
5. காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது - பிரதமர் மோடி
காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.