தேர்தல் செய்திகள்

கேரளாவில் பிரசாரம் செய்ய பா.ஜனதா தலைவர்கள் படையெடுப்பு + "||" + The invasion of the BJP leaders to campaign in Kerala

கேரளாவில் பிரசாரம் செய்ய பா.ஜனதா தலைவர்கள் படையெடுப்பு

கேரளாவில் பிரசாரம் செய்ய பா.ஜனதா தலைவர்கள் படையெடுப்பு
கேரளாவில் பிரசாரம் செய்ய பா.ஜனதா தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்,

கேரளாவில் பா.ஜனதா தலைவர்கள் பலர் பிரசாரம் செய்ய உள்ளனர்.

கேரளாவில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் 23-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அங்கு போட்டியிடுகிறார்.


அதனால், கேரளாவில் பிரசாரத்துக்கு பா.ஜனதா முக்கியத்துவம் அளிக்கிறது. பா.ஜனதா மேலிட தலைவர்கள் பலர் அடுத்தடுத்து அங்கு பிரசாரத்துக்கு செல்கிறார்கள்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, 8-ந் தேதி ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

மத்திய மந்திரிகள் ஸ்மிரிதி இரானி, ஆர்.கே.சிங் ஆகியோர் 9-ந் தேதி கேரளாவில் பிரசாரம் செய்கிறார்கள். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 11-ந் தேதியும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 13-ந் தேதியும் பிரசாரம் செய்கிறார்கள்.

மத்திய மந்திரி நிதின் கட்கரி 15-ந் தேதி கேரளாவில் பிரசாரம் செய்கிறார். ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 16-ந் தேதி பிரசாரம் செய்கிறார்.

மத்திய மந்திரி பியூஸ் கோயல் 19-ந் தேதியும், மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி 20-ந் தேதியும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் 21-ந் தேதியும் வாக்கு சேகரிக்கிறார்கள்.

பிரசாரத்துக்கு வரும் தலைவர்கள், பல்வேறு தொகுதிகளில் பா.ஜனதா செயல் வீரர்கள் கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் சுயேச்சை வேட்பாளருக்கு கத்திக்குத்து
கேரளாவில் சுயேச்சை வேட்பாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
2. கேரளாவில் உள்ள குப்பைகளை தமிழக பகுதியில் கொட்டுவதா? நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கேரளாவில் உள்ள குப்பைகளை தமிழக பகுதியில் கொட்டுவதா? என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
3. கேரளாவில் தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக துவங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்கும், சராசரிக்கு குறைவாகவே மழை பெய்யும் என தகவல்
கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்கும், சராசரிக்கும் குறைவாக மழை பெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கேரளாவில் வாக்களிக்க வந்த 8 பேர் திடீர் சாவு - 4 அதிகாரிகள் மயக்கம்
கேரளாவில் வாக்களிக்க வந்த முதியவர்கள் உள்பட 8 பேர் திடீரென இறந்தனர். மேலும் 4 அதிகாரிகள் மயக்கம் அடைந்தனர்.